வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் நகை பறிப்பு

9 November 2020, 3:06 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே விவசாயி அவரது  மனைவியிடம் கத்தியை காட்டி வீட்டில் இருந்த ஒரு கிலோ வெள்ளி, அரை சவரன் தங்க நகை, காரை  திருடிச் சென்ற முகமூடி அணிந்த  ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காயலார்மேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஏகாம்பரம். இவர் தனது மனைவியுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், திடீரென சுவர் ஏறி குதித்து அங்கு வந்த 5 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த ஏகாம்பரம் மற்றும் அவரது மனைவி காசியம்மாள் இருவரிடமும்  கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் அரை சவரன் தங்க மோதிரம் உள்ளிட்டவைகளை திருடிக் கொண்டு பின்னர் அங்கு வீட்டில்  கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தால்  சிசிடிவி கேமரா பதிவு இயந்திரத்தை திருடிக்கொண்டு செல்போன் கார் சாவியை பிடுங்கி அங்கிருந்த காரை கடத்திச் சென்றது.

இதுகுறித்து ஏகாம்பரம் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏகாம்பரம் புதிய வீடு குடியிருப்புகள் இல்லாத பகுதியில் கட்டி இருந்த நிலையில், கொள்ளை கும்பல் 5 லட்சம் பணம் கொடுக்குமாறு கத்தியை காட்டி மிரட்டியுள்ளது. பின்னர் அவரிடம்  பணம் இல்லாததால் பீரோவில் இருந்ததை மட்டும் திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு காரில் பதிவாகி இருந்த கைரேகைகளை கொண்டு மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர் வீடு புகுந்து விவசாயிடம் கத்தியை காட்டி வெள்ளி பொருள் நகை காரை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 15

0

0