பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகள்: கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

8 July 2021, 3:33 pm
Quick Share

காஞ்சிபுரம்: சாலவாக்கம் பகுதியில் பொதுமக்களையும் கடை வைத்து உள்ளவர்களையும் அச்சுறுத்தி வரும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சாலவாக்கத்தில் மளிகை கடைகள், பழக்கடைகள், துணிக் கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி கடைகள் உள்ளிட்ட வணிகக் கடைகள் உள்ளது. சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்கு சாலவாக்கத்திற்கு வருகின்றனர்.

இந்நிலையில் சாலவாக்கத்தில் குரங்குகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்களும்,கடைகள் வைத்து உள்ளவர்களும் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து சாலவாக்கம் ஊராட்சி செயலர் மதுராந்தகம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து சாலவாக்கம் பகுதிக்கு வந்த வனத்துறையினர் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடித்து வருகின்றனர். வனத்துறையினர் இந்த நடவடிக்கையால் பொதுமக்களும், கடைகள் வைத்து உள்ளவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Views: - 36

0

0