நெல்லை மாவட்டத்தில் மீண்டும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு: மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேட்டி

9 July 2021, 5:58 pm
Quick Share

நெல்லை: நாளை முதல் நெல்லை மாவட்டத்திற்கு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கண்காணிக்க உள்ளாதாகவும், மாவட்டத்தில் மீண்டும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவும் உள்ளங்கள் அமைப்பு இணைந்து கொரோனா நோய்ப் பரவலின் மூன்றாவது அலையை தடுக்க கிராமம் கிராமமாக சென்று நாட்டுப்புற கலை குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பறை இசைத்து தொடங்கி வைத்தார். பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் , கரகாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் மூலம் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது சமூக இடைவெளி முக கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் படிபடியாக குறைந்து தற்போது 1.2 சதவீதமாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 3 அலை வராமல் தடுக்க கிராமப்புற மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கவும் தடுப்பூசி செலுத்திகொள்ளவும், மக்களிடத்தில் நாட்டுபுறகலைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இரண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிகளவில் பாதிப்பானது இதுவரை மாவட்டத்தில் கண்டறியபடவில்லை என தெரிவித்தார். மேலும் நோய் பாதிப்பு தொடர்ந்து காணும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க பட உள்ளதாக தெரிவித்த அவர், நாளை முதல் நெல்லை மாவட்டத்திற்கு வரும் வெளியூர் மக்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

அவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். பாதிப்பு அதிகம் கண்டறியும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரபடுத்தப்பட உள்ளது. கடந்த அலையை விட மருத்துவமனையில் அதிகளவு படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனவும், மூன்றாவது அலையை கட்டுபடுத்த தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாதவர்களை நெல்லை மாவட்டத்தில் கண்டறிய மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய்க்கு தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது என தெரிவித்தார்.

Views: - 119

0

0