தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து ராஜ்காட் வரை சைக்கிள் பேரணி

Author: kavin kumar
23 August 2021, 3:54 pm
Quick Share

நெல்லை: தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ராஜ்காட் வரை சைக்கிள் பேரணி செல்லும் சிஆர்பிஎப் வீரர்களை நெல்லையில் மாவட்ட ஆட்சியர் வழி அனுப்பி வைத்தார்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தேச ஒற்றுமையை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ் (பிட் இந்தியா) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ராஜ்காட் வரை சுமார் 2800 கீமீ தூரம் சைக்கிளில் பேரணியாக செல்கின்றனர். கன்னியாகுமரியில் நேற்று இந்த சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. இதில் 15 வீரர்கள் மற்றும் ஐந்து மாற்று வீரர்கள் என மொத்தம் 20 பேர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர் நேற்று மாலை நெல்லை வந்தடைந்த வீரர்களை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் வரவேற்றார.

தொடர்ந்து அவர்களை நெல்லையிலிருந்து வழியனுப்பும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சைக்கிள் பேரணி செல்லும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். பின்னர் வீரர்களை மாவட்ட ஆட்சியர் உற்சாகமுடன் வழியனுப்பி வைத்தார். மேலும் வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் நெல்லையை சேர்ந்த சைக்கிள் ஆர்வலர்கள் மற்றும் சிறுவர்கள் அவர்களுடன் சில கிமீ தூரம் சென்றனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக சைக்கிள் பேரணி நிகழ்வு அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் உள்ள மாவட்டமாக நெல்லை திகழும் என்றும் பெருமிதமாக தெரிவித்தார்.

Views: - 197

0

0