நெல்லையில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படை அணிவகுப்பு

2 March 2021, 4:21 pm
Quick Share

நெல்லை: தாழையூத்து பகுதியில் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படை அணிவகுப்பு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செயல்படுத்தி வருகின்றது. இந்த தேர்தலில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பை செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை பொது மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதத்தில் காவல்துறையின் அணிவகுப்பு நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா, துணை ராணுவப் படையைச் சேர்ந்த அதிகாரி ராஜேந்திரன் உட்பட்ட காவல் துறையினர் கொடி அணிவிப்பது கலந்து கொண்டனர்.

தாழையூத்து விளக்கு பகுதியில் இருந்து தொடங்கி பகுதி முழுவதும் காவல்துறை அணிவகுப்பு ஈடுபட்டனர். பொதுமக்கள் யாரும் தேர்தலில் வாக்களிக்க பயம் கொள்ளவேண்டாம், காவல்துறையின் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து உள்ளது என்று பொதுமக்களுக்கு விளக்கும் வண்ணம் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படை வந்திருப்பதாகவும், மொத்தம் 128 இடங்கள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு மத்திய பாதுகாப்பு படையை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Views: - 0

0

0