சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வேன் ஓட்டுனர்: சாகும் வரை ஆயுள் தண்டணை விதித்த நீதிமன்றம்

Author: Udayaraman
15 October 2020, 10:21 pm
Quick Share

நெல்லை: குன்னத்தூரில் கடந்த 2016 ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வேன் ஓட்டுனருக்கு தமிழகத்திலேயே முதல் முறையாக சாகும் வரை ஆயுள் தண்டணையும், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

நெல்லை டவுண் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (33). இவர் வேன் ஓட்டுனராக உள்ளார் . இவரது வேனில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து சென்று பள்ளிகளில் விடும் பணி செய்து வந்தார். இந்நிலையில் தச்சநல்லூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம் . வழக்கம்போல் கடந்த 08-06-2016 அன்று சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்றவர் மற்றக் குழந்தைகளை இறக்கிவிட்டு இந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் . இது அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே இதுகுறித்து டவுண் அனைத்து மகளில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுனர் பெருமாளை கைது செய்தனர் இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 31 சாட்சிகளிடம் விசாரணை செய்ப்பட்டு நிறைவடைந்த நிலையில் குற்றவாளிக்கு தமிழகத்திலேயே முதல் முறையாக சாகும் வரை, அதாவது இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனையும் , 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி இந்திராணி தீர்ப்பு அளித்தார் . மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அபராத்தொகையுடன் சேர்த்து அரசு தரப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் என மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் குழந்தையின் காப்பாளர் பெயரில் வங்கியில் செலுத்த உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்து பெருமாள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .

Views: - 55

0

0