டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்!!

24 December 2020, 8:20 pm
Tirupur Tasmac Protest -Updatenews360
Quick Share

திருப்பூர் : புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பெண்கள் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையத்திலிருந்து அவிநாசி செல்லும் ரோட்டில் வெங்கமேடு பகுதியில் செயல்ட்டுவரும் ரெஸ்டாரண்ட் ஓட்டல் ஒன்றில் புதிதாக டாஸ்மாக் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிலர் திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது. இதை அறிந்த திருமுருகன் பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசியதை அடுத்து மறியலை கைவிட்டு தொடர்ந்து கடையின் நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளையும் கையில் வைத்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில் அப்பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஏற்கனவே ஒரு கடை செயல்பட்டுவருகிறது. அங்கு மது அருந்த வரும் குடிமகன்கள் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசுவதும், நடந்து செல்லும் பெண்களை கேலி செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை இந்நிலையில் புதிதாக மேலும் ஒரு கடை திறக்கப்பட்டுள்ளது இது மேலும் எங்களுக்கு சிரமத்தை கொடுக்கும், இதுதவிர அருகில் தனியார் மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டுவருகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்சென்று வருபவர்களுக்கு மேலும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது என்றனர்.

Views: - 0

0

0