ஸ்ரீபெரும்புதூரில் புதிய போக்குவரத்து சிக்னல்கள் தொடக்கம்

7 September 2020, 7:24 pm
Quick Share

காஞ்சிபுரம்: தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பன்னாட்டு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை மிகுந்த பகுதியில் சிக்னல்கள் இல்லாததால் கனரக வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வதுடன் விபத்துகளும் நேரிட்டு வந்தது. இதனையொட்டி அதனை தவிர்க்கும் பொருட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் ஒரகடம் தொழிற் பூங்கா சந்திப்பு,

ஸ்ரீபெரும்புதூர் நுழைவுவாயில் உள்ளிட்ட இடங்களில் சோலார் பேனல் மூலம் இயங்கும் அதி நவீன போக்குவரத்து சிக்னல்கள் புதிதாக பொருத்தப் பட்டுள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதன்பிறகு விழாவில் பேசிய அவர் குற்றச்செயல்களை தடுப்பதற்காக சிப்காட் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் உதவி கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் அஞ்சலா லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Views: - 0

0

0