புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: துணைநிலை ஆளுநருக்கு நாராயணசாமி கடிதம்

23 December 2020, 7:34 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கோவாவை போன்று புதுச்சேரியும் ஒரு சுற்றுலாத்தலம். கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை செய்யவில்லை. பிரெஞ்சு கலாச்சாரம் என்பதால் புதுச்சேரி மக்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். பொதுமக்கள் பாதுகாப்பில் அரசு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரியில் கொரோனாவில் இருந்து 97.41% பேர் குணமடைந்துள்ளனர் தற்போது 178நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலில் படி முக கவசம் அணிந்து கொண்டு ,

சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாட கடற்கரை சாலை திறந்து இருக்கும். அரசின் அன்றாட நிகழ்வுகளில் ஆளுநர் தலையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது உள்ள பொருளாதார சூழலில் பெரும்பாலான மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கவில்லை. தமிழ்நாடை சுட்டிக்காட்டி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை செய்யக்கோரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரூ.2500 அறிவித்ததை போல புதுச்சேரியிலும் வழங்க உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று மக்களை சந்தித்தோம் ஆனால் இது நாள் வரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியே வராமல் பாதுகாப்பாக உள்ளார். அடிப்படைகள் தெரியாமல் பிறருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுரை கூற கூடாது என துணைநிலை ஆளுநரின் கடிதத்திற்கு முதலமைச்சர் நாராயசாமி பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

Views: - 0

0

0