மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கியமான ஊழல் குற்றச்சாட்டாகும்.
மதுரை மாநகராட்சி, 5 மண்டலங்களையும் 100 வார்டுகளையும் கொண்ட ஒரு முக்கியமான உள்ளாட்சி அமைப்பாகும். இங்கு வணிக வளாகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியைவிட குறைவாக விதிக்கப்பட்டதாக எழுந்த புகாரே இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
இந்த முறைகேடு முதன்முதலில் மதுரை மாநகராட்சியின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால், குறிப்பாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களால் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
வணிக வளாகங்களுக்கு குறைவாக வரி விதிக்கப்பட்டதன் மூலம் மாநகராட்சிக்கு சுமார் ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாநகராட்சியின் அப்போதைய ஆணையராக இருந்த தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரணையை தொடங்கியது.
தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது பணியாற்றி வரும் சுரேஷ்குமாரை காவல்துறை நேற்று கைது செய்துள்ளது. இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 19 ஊழியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் சென்னையில் இருந்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து வருகின்றனர்
மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஏற்கனவே திமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வரி முறைகேடு விவகாரத்தில் பொன்வசந்த்க்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியான நிலையில் சென்னையில் வைத்து கைது
ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேயரி கணவர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.