பாஜகவில் இணைந்த 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்
1 September 2020, 11:56 pmகன்னியாகுமரி: நாகர்கோவிலில் சுமார் 150க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த மகளிர் மற்றும் ஆண்கள் இன்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள், மற்றும் ஆண்கள் இன்று நாகர்கோவில் வந்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர். மத்திய அரசு பெண்களுக்கான முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பான இயக்கமாக இருப்பதாலும், சமூக பணிகளை அதிக அளவில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக ஆளும் பாரதிய ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டதாக பைரவி பவுண்டேசன் தன்னார்வ அமைப்பின் நிர்வாகி ஷோபா தெரிவித்தனர்.
0
0