கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது…

10 August 2020, 10:12 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை வடசேரி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கிருஷ்ணன்கோவில் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவரவே அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த ஊசி மணிகண்டன், சதீஷ் பாபு, சிவக்குமார் என்பது தெரியவந்தது.

மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு, கஞ்சா வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து இருபதால் மாவட்ட எல்கையில் இ – பாஸ் இல்லாமல் எப்படி நுழைந்தார்கள் ? கொண்டு வந்து உள்ள மேலும் கஞ்சாக்கள் எங்கே பதுக்கி விட்டு உள்ளார்கள் ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Views: - 1

0

0