பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முஸ்லிம் ஜமாத் கமிட்டியின் நிர்வாகிகள் மனு…

3 August 2020, 10:22 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் உள்ள கடைகளை மாலை 7 மணி வரை திறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கமிட்டியின் நிர்வாகிகள் ஏராளமானோர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் “நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டத்தில் கடைகளை மாலை 7 மணி வரை திறந்து இருக்க அனுமதி வழங்கியது போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் கூலி தொழிலாளர்களின் நலன் கருதி அனுமதி வழங்க வேண்டும்,

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்த மேலும் 4 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும், வீட்டு வரி கடைசி வரி வணிக வளாகங்கள் கவரி மற்றும் திருமண மண்டபம் உங்களுக்கான வரிகளை ரத்து செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்களில் நூறு பணியாளர்கள் பணி புரிந்து வந்ததில் ஊரடங்கு காரணங்களால் 80 பேர்களுக்கு வேலை இழப்பு ஏற்பாடு உள்ளதால் அவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Views: - 10

0

0