ஊர்வலமாக வந்த தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் போலீசாருடன் வாக்குவாதம்…

10 August 2020, 4:15 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட தலித் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இங்கு தலித் பணியாளர்கள் மீது ஜாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டு வருவதாகக் கூறி அதன் கிளை மேலாளர் மீது தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் அளித்து ஐந்து மாதங்கள் ஆகியும் இதுவரை போலீசார் கிளை மேலாளர் மீது எந்தவிதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறி இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Views: - 11

0

0