நீலகிரியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் : மரங்கள் மற்றும் தாவரங்களும் கணக்கெடுப்பு
17 November 2020, 1:11 pmநீலகிரி : முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்கள் உள்ளன.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியில் மழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக் கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
வரும் 22ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு பணியில் 150 வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
369 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள இந்த வெளி மண்பா பரப்பை 32 நேர்க்கோடுகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்றி வனத்துறையினர் மட்டும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கணக்கெடுக்கும் பணி துல்லியமாக நடைபெற ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வன விலங்குகள் கால், தடம், கீரல், எச்சில் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள மரங்கள், தாவரங்களையும் கணக்கெடுக்கும் பணியும் நடைபெறுகிறது.