ஊர் சுற்றி காட்டும் குதிரையின் அவல நிலை.! கைகோர்த்த தனியார் விலங்கின அமைப்பு.!!

17 August 2020, 2:46 pm
Horse - Updatenews360
Quick Share

நீலகிரி : உதகை நகரில் சுற்றித் திரிந்த பந்தயக் குதிரைகளை பிடித்து தனியார் விலங்கின அமைப்பு பராமரிப்பிற்காக அழைத்து சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனோ தொற்று எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன. சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்திலும் அனைத்து சுற்றுலா தளங்களும் தற்போது வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மூடப்பட்டுள்ளன.

உதகை நகரில் சுற்றுலா தலங்களில் குதிரைகள் மூலமாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளதால் குதிரைகள் உணவில்லாமலும் உரிமையாளர்களால் கவனிக்கப்படாமல் நகரின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்தது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தனியார் விலங்கின அமைப்பு மூலம் நகரில் சுற்றித் திரியும் குதிரைகளை பிடித்து அதற்குத் தேவையான உணவுகள் மற்றும் பராமரிப்புக்காக மசனகுடி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் கால்நடை மருத்துவர் கூறுகையில் கொரோனா காலத்தில் குதிரைகளை அதன் உரிமையாளர்கள் உணவின்றி நகர்புறங்களில் விட்டுச் செல்வதால் விபத்து ஏற்பட்டு குதிரைகள் இறக்கும் நிலை ஏற்படுவதாகவும், இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமானது இரண்டு லட்சம் ரூபாய் இதற்காக ஒதுக்கி கொரோனோ காலம் முடியும் வரை குதிரைகள் அனைத்தும் விலங்கின அமைப்பாளர்கள் சார்பில் பராமரிக்கப்படும் என கூறினார்.

Views: - 33

0

0