மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பிளேடால் சரமாரியாக வெட்டிய வாலிபர்

20 April 2021, 7:38 pm
Quick Share

திண்டுக்கல்: மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கஞ்சா போதை வாலிபர் வீடு புகுந்து பிளேடால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 1- வது வார்டு கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (38). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே சுற்றித்திரிவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை அவர் வசிக்கும் வீட்டின் அருகே நடந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த கெளதம் என்ற கஞ்சா போதை வாலிபர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடமிருந்து தப்பிய நாகேந்திரன் அவரது வீட்டுக்குள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மீண்டும் அரை மணி நேரத்திற்கு பின் வந்த கெளதம் போதை தலைக்கேறிய நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட நாகேந்திரன் விரட்டி அவரது வீட்டுக்குள்லேயே சென்று பிளேடால் தலை முகம் ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளார். அளரியடித்த நாகேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நாகேந்திரனின் தாயார் ஜக்கம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் நிலக்கோட்டை காவல்துறையினர் போதை ஆசாமி கெளதமை கைது செய்த காவல்துறையினர் நிலக்கோட்டை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

Views: - 44

0

0