சித்த மருந்துகளை தினமும் உண்டு வந்தால் எத்தனை அலை வந்தாலும் எதிர் கொள்ள முடியும்: மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பேட்டி…

Author: Udhayakumar Raman
6 August 2021, 9:31 pm
Quick Share

கரூர்: சத்தான உணவுடன் சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனைப் படி தினமும் உண்டு வந்தால் கொரோனா எத்தனை அலை வந்தாலும் எதிர் கொள்ள முடியும் என கரூரில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்தார்.

கரூர் நகரில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கான சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோய்க்கான சிகிச்சை முகாம் நடைபெற்றது. காலை 8 மணி துவங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கிசிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூருக்கான மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் கலந்து கொண்டார். அப்போது கரூரில் சித்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு மருத்துவர் காமராஜ் ஆலோசனைகளை வழங்கினார்.

பின்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மூலிகை செடிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் காமராஜ், சுகாதாரமான மற்றும் சத்தான உணவுகளுடன் பெரியவர்கள், சிறுவரகள் அனைவரும் சித்த மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் கொரோனா எத்தனை அலைகள் வந்தாலும் எதிர்கொள்ளலாம் என்றார். மக்களை தேடி தமிழ் மருத்துவம் என்ற முறையினை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில் மாவட்டங்கள் தோறும் செவ்வாய் கிழமைகளில் மாவட்ட சித்தா மருத்துவமனைகளில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு சிகிச்சை பெறலாம் என்றார்.

Views: - 131

0

0