குறிச்சி குளத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி

31 August 2020, 6:35 pm
Quick Share

கோவை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் கோவை குறிச்சி குளத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை வடக்கு, தெற்கு, கணபதி ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள் 30 பேர் நீர்நிலைகளில் சிக்கி கொள்பவர்களை காப்பாற்றும் ஒத்திகை நிகழ்ச்சியை கோவை குறிச்சி குளத்தில் செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர். மாவட்ட அலுவலர் ஜெகதீசன் உத்தரவின் பேரில் உதவி மாவட்ட அலுவலர் தவமணி, தலைமையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நீரில் சிக்கி தவிப்பவர்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பைபர் படகில் சென்று அவர்களை மீட்டு வருவது போன்று செயல் விளக்கம் தத்துரூபமாக செய்து காட்டப்பட்டது.

எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு மீட்பு பணிகள் குறித்த செயல்முறை பயிற்சியாக இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நடத்திய இதுபோன்ற ஒத்திகை நிகழ்ச்சி நாளை மேட்டுப்பாளையம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் அலுவலக தீயணைப்பு துறையினர் சார்பில் பவானி ஆற்றில் போலி ஒத்திகை நடத்த உள்ளதாக தெரிவித்த தீயணைப்பு துறை அலுவலர்கள்,

பருவ மழை காலத்தில் வீரர்களை தயார் செய்துக் கொள்ளும் வகையில் இதுபோன்ற ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளபடுவதாகவும் கூறினார். இந்த ஒத்திகை நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் தங்களது அலைபேசி மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்ததுடன், ஒத்திகையை ஆச்சிரியத்துடன் பார்வையிட்டனர்.

Views: - 0

0

0