இது ஒன்றும் சொகுசு ஹோட்டல் அல்ல! தாஜ்மஹால் வடிவில் நொய்டாவில் ஒரு அதிசயம்

1 February 2021, 2:33 pm
Quick Share

நொய்டாவில் சொகுசு ஹோட்டல்களை மிஞ்சும் வகையில், புதிய ஆராய்ச்சி மையம் ஒன்றை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கட்டியுள்ளது. இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இது உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளது. இதனை கண்டு நெட்டிசன்கள் மூக்கின் மேல் விரல் வைத்துள்ளனர்.

காதலின் அடையாளம், கட்டிடக் கலையின் மகத்துவம், உலக அதிசயங்களில் ஒன்று என மனிதப் படைப்பின் பிரமாண்டமாக திகழ்கிறது தாஜ்மஹால். சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும், அற்புதங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது.

தாஜ்மஹாலின் அழகால் ஈர்க்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில் அமையவிருக்கும் புதிய ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தை அது போலவே வடிவமைத்திருக்கிறது. ஆம்.. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரில், மிக பிரமாண்ட முறையில், தாஜ்மஹாலை போலவே தனது ஆராய்ச்சி மையத்தை அமைத்திருக்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், இந்தியாவில், பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் தனது ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது. தற்போது நொய்டாவில் தாஜ்மஹால் வடிவில் தனது புதிய ஆராய்ச்சி மையத்தை வடிவமைத்துள்ளது. அங்கு தனது நிறுவனத்தின் முதல் இன்ஜினியரிங் மையத்தையும் உருவாக்கியிருக்கிறது.

6 மாடி கட்டிடமான இதில், முதல் 3 மாடி கட்டிடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர், ‘நாங்கள் வடிவமைத்ததிலேயே மிக அழகானது என்றால் அது நொய்டா அலுவலகம் தான். நாங்கள் நினைத்ததை விட அதை மிக அழகாக எங்கள் குழு உருவாக்கியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், புதிய கேமிங் பிரிவு ஆகிய துறைகளை மேமற்படுத்தும் நோக்கில், இந்த மையம் செயல்படும்’’ என்றார்.

இதுதொடர்பான வீடியோவையும் அந்நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த நிறுவனத்தின் அழகை கண்டு நெட்டிசன்கள் கண் வைத்து வருகின்றனர்.

Views: - 0

0

0