குடியரசு தினத்தன்று கோவையில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 130 உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

26 January 2021, 6:48 pm
Quick Share

கோவை: கோவையில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 130 நிறுவனங்களுக்கு தொழிலாளர் நல துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தொழிலாளர் உதவி ஆணையர் கோவை (அமலாக்கம் வெங்கடேசன் தலைமையில் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கோவை பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் போது குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா? அல்லது அன்றைய தினத்தில் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கும் பட்சத்தில் உரிய முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளனவா? உள்ளிட்டவை விசாரிக்கப்பட்டன. மொத்தம் 193 நிதி நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது 65 கடைகள் மற்றும் நிறுவனங்கள் , 62 உணவு நிறுவனங்கள்,

3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 130 உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் அல்லது ஆய்வாளருக்கு முன்னறிவிப்பு அளிக்காமலும் உள்ளது தெரிய வந்தது. இந்த நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Views: - 0

0

0