தனது சொந்த செலவில் குளத்தை தூர்வாரும் ரவீந்தரநாத்குமார்….

16 August 2020, 2:18 pm
Quick Share

தேனி: அனுமந்தன்பட்டியில் உள்ள வள்ளியம்மாள் குளத்தினை தூர்வாரும் பணியை பெரியகுளம் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத்குமார் தனது சொந்த செலவில் இன்று துவக்கினார்.

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் உள்ள வள்ளியம்மாள் குளத்தினை அப்பகுதி மக்கள் தூர் வரும்படியாக கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வழிகாட்டுதலின் படி பெரியகுளம் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத்குமாரின் சொந்த செலவில் குளத்தை தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது.

இதனை தமிழக துணை முதல்வரின் இரண்டாவது மகனும், ஆன்மீக செம்மலு மாகிய ஜெயப்பிரதீப் இன்று துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா நடேசன் கம்பம் ஒன்றிய செயலாளர் இளைய நம்பி சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், உத்தம்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகுராஜா மற்றும் அதிமுக கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 34

0

0