சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

28 January 2021, 8:52 pm
Quick Share

காஞ்சிபுரம்: வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை யொட்டி தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தைப்பூசத்தை யொட்டி விமர்சையாக நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். தரிசனம் செய்ய வந்த துணை முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்பு கோயில் நிர்வாகம் சார்பிலும் துணை முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதை அடுத்து முருகப் பெருமானை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த அப்பன்ராஜ் திவ்யா தம்பதியினருக்கு பிறந்த 3 மாத பெண் குழந்தைக்கு ஜெயஸ்ரீ என பெயர் சூட்டினார். பின்னர் தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு துணை முதல்வர் அன்னதானம் வழங்கினார்.

Views: - 0

0

0