பத்திர பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

9 November 2020, 6:49 pm
Quick Share

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய இடத்திற்கு பத்திரப் பதிவு செய்வதற்காக அதிகாரியிடம் பேசியுள்ளார். அதிகாரி சரவணன் 15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். முதல் கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் சார் பதிவாளர் பெற்றுள்ளார் இன்று அலுவலகத்துக்கு வரும்படி கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியன் மீதம் ஏழாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதற்கு முன்பாக சுப்ரமணியன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சார்பதிவாளர் நெஞ்சம் கேட்டு உள்ளார் என தகவல் கொடுத்ததின் பேரில் அந்த பணத்தில் ரசாயனம் தடவி அனுப்பி வைத்தனர்.

சுப்பிரமணியன் சார்பதிவாளரிடம் பணம் கொடுத்துள்ளார். அதற்கு அவர் என்னிடம் கொடுக்க வேண்டாம் உதவியாளர் செந்தில்குமாரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். செந்தில் குமாரிடம் வழங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது லஞ்சம் பெற்றதாக ஒப்புக்கொண்டனர். சார்பதிவாளர் சரவணன் மற்றும் உதவியாளர் செந்தில் குமார் ஆகியோரை கைது செய்து ஏழாயிரம் ரூபாயை பறிமுதல் செய்தும், மேலும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கரம்பக்குடி யில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதில் 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 23

0

0