போலி பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்து தருமபுரியில் பறிமுதல்
Author: kavin kumar14 August 2021, 9:55 pm
தருமபுரி: தருமபுரியில் போலி பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலை புறவடை பகுதியில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சாலையோர உணவகம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்தை சந்தேகத்தின் பேரில் அப்பேருந்தின் ஓட்டுனர்களான ஆந்திர மாநிலம் ராஜசேகரரெட்டி, ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை செய்த போது முன்னுக்கு முரனாக பேசியதையடுத்து அப்பேருந்தை சோதனையிட்டனர். சோதனையில் அந்த ஆம்னி பேருந்து போலி பதிவெண் மூலம் இயக்கப்படுவது தெரியவந்தது. இந்த பேருந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து திருப்பூருக்கு பீகார் மாநில தொழிலாளர்கள் 30 பேரை வேலைக்காக ஏற்றிச் செல்வது தெரிய வந்தது.
அதனையடுத்து அந்த பேருந்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் வேறு பேருந்து மூலம் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், பேருந்தின் சேஸ் எண் மணிப்பூர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வாகனத்தின் எண்ணாக இருப்பது தெரிய வந்தது. இந்த பேருந்துக்கு ஆந்திரா மாநிலத்தில் பதிவு செய்தது போன்ற ஒரு போலி பதிவெண்ணை ஒட்டி பேருந்து இயக்கப்பட்டுள்ளது. எனவே பேருந்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்ததோடு தொடர்ந்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.
0
0