பெரியாரிய உணர்வாளர்கள் திடீர் போராட்டம்…

11 August 2020, 9:54 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அருகே தற்காலிகமாக சாலையோரம் அமைத்த கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் காளைமாடு சிலை அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிகவளாகம் கட்டப்பட்டு வருவதால் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் அங்கிருந்த அம்மன் சிலை உட்பட 3 சாமி சிலைகளும் தற்காலிகமாக காளைமாடு சிலை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டது. இதனை அறிந்த பெரியாரிய உணர்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்த அம்மன் சிலை உட்பட 3 சிலைகளும் அப்புறப்படுத்தினர். மேலும் சிலைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.