குன்னூர் முக்கிய சாலையில் விழுந்த மரங்கள்: மின்னல் வேகத்தில் செயல்பட்ட தீயணைப்புத்துறை…!

15 May 2021, 8:56 pm
Quick Share

நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக முக்கிய சாலையில் 3 க்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.

அரபி கடலில் உருவான ‘டவ்டே’ புயலாக காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைபாதை மற்றும் குன்னூர் – ஊட்டி சாலையில் 3 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து சற்று நேரம் பாதித்தது . உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர்.பின்னர் போக்குவரத்து சீரானது. சாரல் மழை காரணமாக கடுங்குளிரும் நிலவி வருகிறது.

Views: - 29

0

0