ஓணம் கொண்டாட்டம்: ஒலிம்பிக் வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் படுக நடனத்துடன் கோலாகலம்…
Author: kavin kumar21 August 2021, 7:31 pm
நீலகிரி: குன்னூரில் சமூக இடைவெளியுடன் திருவாதிரை களி நடனம், படுக நடனம் உட்பட நடனங்களுடன் பூக்களம் அமைத்து ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கேரள மாநிலத்தை ஒட்டி உள்ளது. இங்கு மலையாள இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை, பல்வேறு அமைப்புகள், கல்லூரி, பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம், விமர்சையாக கொண்டாடி வருவது வழக்கம். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை தினத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 21 ம் தேதி ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு காரணமாக ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் பூக்களம் அமைத்து, கொண்டாடி வருகின்றனர்.
குன்னூர் பகுதிகளில் உள்ள மலையாள இன மக்கள் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில், சமூக இடைவெளியுடன் நின்று, பூக்களம் அமைத்து, திருவாதிரைக்களி நடனம், படுக நடனம் உட்பட பல்வேறு கொண்டாட்டத்துடன்கோலாகலமாக ஒணம் கொண்டாடினர்.இந்த ஆண்டு இந்திய வீரர்கள் பதக்கங்கள் வென்றதை ஒட்டி ஒலிம்பிக் வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ஒலிம்பிக் சின்னத்தை கோலமாக வரைந்து பூக்கள் அமைத்து கோலாகலமாக ஓணம் திருவிழா கொண்டாடினர்.
0
0