ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

26 August 2020, 7:57 pm
Cbe Collector Request - Updatenews360
Quick Share

கோவை: ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கோவையில் வரும் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 31ம் தேதி (திங்கள் கிழமை) ஓணம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 12ம் தேதி (சனிக்கிழமை) அன்று கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களும், வேலை நாளாக செயல்படும் அறிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட 31ம் தேதி அன்று கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகளைக் கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். கொரோனா வைரஸ் தொற்று பரவமால் தடுக்கும் பொருட்டு, ஓணம் பண்டிகையை சமூக இடைவெளியுடனும் பாதுகாப்பாகவும் கொண்டாடுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.