ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

Author: Udhayakumar Raman
30 March 2021, 6:34 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் மற்றும் அன்பளிப்பு கொடுப்பதை தடுத்து நிறுத்த தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நாவலூர் பகுதியில் தாசில்தார் ஜெயசுதா தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது,

அவ்வழியாக வந்த டெம்போ டிராவல் வேனை சோதனை செய்த பொழுது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான முத்து மாதவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Views: - 69

0

0