சொத்துத் தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு
29 August 2020, 3:28 pmவிருதுநகர்: சாத்தூர் அருகே சொத்துத் தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பாப்பாகுடியை சேர்ந்த கருப்பசாமி என் வரது மகன் ஆழ்வார் (45) என்பவருக்கும், விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்த பூஞ்சோலையப்பன் என்பவரது மகன் யோகராஜ் (30) என்பவருக்கும், பாப்பாகுடியில் உள்ள விவசாய நிலத்திற்கான பிரச்சினை உள்ளது. இதனையடுத்து இருவருக்கும் விவசாய நிலத்தினை பகிர்வது குறித்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்வார்க்கு சொந்தமான பசுந்தீவணமான வைக்கேல் படப்பை யோகராஜ் தீ வைத்து எறித்து நாசமாக்கியதாகவும் கூறுகின்றனர்.
இதனையடுத்து இன்று ஆழ்வார்க்கும், யோகராஜ்க்கும் இடையே வாக்குவாதம் முற்றி இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதில் யோகராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆழ்வாரை வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இதில் ஆழ்வாரின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ள நிலையில் அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சாத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்து மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனையறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து யோகராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.