குடி குடியை கெடுக்கும்:குடி போதையில் வேலையின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை…

Author: Udhayakumar Raman
24 September 2021, 4:58 pm
Quick Share

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே குடிபோதையில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலம் சிவன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் 46. இவர் தனது உறவினர் லோகநாதன், செல்வசேகரன் உடன் மூவரும் சேர்ந்து லோகநாதன் எனக்குச் சொந்தமான இடத்தில் வேலி அடைக்கும் பணியை செய்து வந்துள்ளனர். இதில் மருது பாண்டியன் மர்மமான முறையில் குடல் சரிந்து இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த சதுர்வேதமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்துகிடந்த மருதுபாண்டியன் இறந்ததற்கான காரணம் என்ன என்று லோகநாதன் மற்றும் செல்வசேகரன் இடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலைக்குச் சென்ற இடத்தில் மருதுபாண்டியன் இருந்ததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். சதுர்வேதமங்களம் போலீசார் மருதுபாண்டியன் கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்து வருகின்றனர்.குடிபோதையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.

Views: - 176

0

0