திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவில் தரிசிப்பதற்கு மட்டுமே அனுமதி: மாவட்ட ஆட்சியர் தகவல்

13 November 2020, 7:36 pm
Quick Share

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவில் தரிசிப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், பூஜைப் பொருட்கள் கொண்டு செல்லவும், அர்ச்சனை செய்யவும் அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் எதிர்வரும் 15.11.2020 அன்று நடைபெறயுள்ள குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு குடிநீர் வசதி, திருக்கோயிலின் சுற்றுப்புறங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வந்து செல்வதற்கு என தனி வழியும் செய்யப்பட்டு வருகிறது. கோவிலில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், பூஜைப் பொருட்கள் கொண்டு செல்லவும், அர்ச்சனை செய்யவும் அனுமதி கிடையாது எனவும் தெரிவித்தார். மேலும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை திருக்கோயிலுக்கு உள்ளே சென்றிட அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளளார்.

Views: - 19

0

0