அசுர வேகத்தில் கடைக்குள் புகுந்த கார்… காரில் வந்தவர்களின் நிலை.???
17 August 2020, 7:26 pmநீலகிரி: கோத்தகிரியில் அசுர வேகத்தில் வந்த கார் கடைக்குள் புகுந்ததில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர்தப்பினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி எஸ் கை காட்டி கஸ்தூரி பாய் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் நேற்று இரவு தனது மனைவியை அழைத்துக் கொண்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று மீண்டும் மாருதி காரில், உறவினர்கள் உட்பட 4 பேருடன் வீட்டிற்கு திரும்பினர். அப்போது காமராஜர் சதுக்கத்தில் இருந்து டானிங்டன் செல்லும் சாலையில் அதிவேகத்தில் சென்றதால்,
கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வணிக வளாக கடைக்குள் புகுந்தது. எப்போது பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் ஊரடங்கு காரணமாக யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதே போல வாகனத்தில் வந்த நால்வரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சி.சி டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. கோத்தகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.