வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் திறப்பு

Author: Udayaraman
5 October 2020, 6:37 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தினை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தினை தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தினை விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் என்ன பயிர் எந்த ரகத்தில் செய்யலாம், விதைகளை எங்கு பெறுவது, நிலத்தின் மண் பரிசோதனை செய்வது, வேளாண் இயந்திரங்களை எங்கு, எப்படி பெறுவது என வேளாண்மைத் துறையில் உள்ள பலன்களைப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் மாவட்ட வேளாண்மை அலுவலகத்துக்கு சென்று ஆலோசனைப் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் கால விரயமும், அலைச்சலும் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு காரிமங்கலத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதியதாக வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிகாட்சியின் வாயிலாக திறந்து வைத்தார். இநிகழ்வில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Views: - 39

0

0