நாளை குடியரசு தினம்.!குமரி கடலோர பகுதிகளில் சஜாக் ஆபரேசன் தொடங்கியது ..!

25 January 2021, 1:13 pm
Quick Share

கன்னியாகுமரி: குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளாக குமரி கடற்கரை பகுதிகளில் இன்று கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சஜாக் ஆபரேஷனில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நாளை குடியரசுத் தினம் கொண்டாடப்படும் நிலையில் , தீவிரவாதிகள் கடல் வழியாக இடுவதை தடுக்க குமரி கடல் பகுதியில் இன்று கடலோர காவல்படையினர் சஜாக் ஆபரேஷன் என்னும் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மாவட்ட எல்லை பகுதியான ஆரோக்கியபுரம் முதல் கேரளா எல்கை நீரோடி வரை உள்ள சுமார் 70 கி.மீ தூரம் ஆழ் கடல் பகுதிகளில் காலை முதல் இரண்டு நாட்கள் நவீன படகுகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆரோக்கியமும் தில் தொடங்கிய இந்த ரோந்து பணி கூடங்குளம் அணுமின் நிலையம் கடற்கரைப் பகுதி வழியாக சின்னமும் டம் ,மணகுடி ,முட்டம் ,சேரியாமுட்டம்,அழிக்கல் வழியாக நீரோடி வரையிலான பகுதிகள் ரோந்து பணி நடக்கிறது. இன்று தொடங்கிய இந்த ரோந்து பணி இரண்டு நாட்கள் நடைபெறுவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தெரிவித்தார்.

Views: - 5

0

0