மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு : சாமானிய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
Author: kavin kumar29 ஜனவரி 2022, 2:53 மணி
திருச்சி : திருச்சியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாமானிய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சாமானிய மக்கள் நல கட்சி சார்பில் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி சிந்தாமணி உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கண்டன உரையை பொதுச் செயலாளர் குணசேகரன் வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட தமிழக ஆறுகளில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நிர்வாகிகள் குமார், வழக்கறிஞர்கள் ராஜகுரு, வெற்றி , ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் மலர்மன்னன் , தர்மலிங்கம் , காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
0