ஆணை மதகு தடுப்பணை நிரம்பி காட்டாற்றில் வெள்ளம்

26 November 2020, 7:11 pm
Quick Share

திருப்பத்தூர்: நிவர் புயலால் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் ஆம்பூர் ஆணை மதகு தடுப்பணை நிரம்பி காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து 2 வது நாளாக நிற்காமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆம்பூர் பகுதியில் உள்ள ஆம்பூர் நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக கருதப்படும் ஆணை மதகு தடுப்பணை அதன் கொள்ளளவை எட்டியது.இதில் இருந்து வெளியேறும் நீர் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. பெத்தலகேம் , ரெட்டி தோப்பு பாலம் ,மோட்டு கொல்லை ஜலால்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் ராஜீவ்காந்தி சந்திப்பு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும் ஆம்பூர் அடுத்த ராமச்சந்திராபுரத்தில் விவசாயி சுப்ரமணி என்பவரின் ஓட்டு வீடு மண் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. அவர்கள் வீட்டில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அனைவரும் திருமண மண்டபத்திற்குச் சென்று விட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாதனூரில் இருந்து உள்ளி செல்லும் சாலையில் உள்ள புளியமரம் மற்றும் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிவர் புயலால் ஆம்பூர் நடராஜபுரம் கஸ்பா, பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்,

மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று அப்பகுதியில் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஐ .இ.எல்.சி காது கேளாதோர் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதே போல் தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் பாதுகாப்பற்ற பழைய வீடுகளிலும், குடிசை வீடுகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தாலுகாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 14 முகாம்களில் 368 பேர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Views: - 0

0

0