வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள்

13 September 2020, 4:16 pm
Quick Share

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி கடைத்தெரு கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் பக்தர்களின் கூட்டத்தினால் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. பேராலயத்தில் உள்ளே வரும் பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெளி மாநில மாவட்ட பக்தர்களுக்கு கடந்த 9 ஆம் தேதி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் அங்கு குவிந்தனர். சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,

கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார் மற்றும் பேருந்துகள் மூலம் வேளாங்கண்ணி வந்துள்ளனர். விடுதிகளும் அங்கு திறக்கப்பட்டு இருப்பதால் வேளாங்கண்ணி கடைத்தெரு கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் பக்தர்களின் கூட்டத்தினால் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. பேராலயத்தில் உள்ளே வரும் பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 7

0

0