நிரம்பி வழியும் புதிதக கட்டப்பட்ட வெங்கச்சேரி தடுப்பணை: ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்

29 November 2020, 4:35 pm
Quick Share

காஞ்சிபுரம்: புதிதக கட்டப்பட்ட வெங்கச்சேரி தடுப்பணை முழுவதுமாக நிரம்பி நீர் செல்வதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர் .

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில், வெங்கச்சேரி – மாகரல் இடையே, செய்யாற்று பகுதி உள்ளது. செய்யாற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறிய தடுபணை உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையின் எதிரொலியாக செய்யாறு ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து வெங்கச்சேரி தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிந்தது ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.

இப்போதுதான் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் தண்ணீர் செல்வதை கண்டு ரசித்து வருகிறார்கள். மேலும் சிலர் ஆபத்தை உணராமல் அதில் இறங்கி குளித்து செல்பி எடுத்து செல்கிறார்கள். இந்த தடுப்பணையில் நீர் தேங்கி நிற்கும் காரணத்தினால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 11

0

0