பசு மாட்டிற்கு பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவரை கண்டித்து உரிமையாளர் போராட்டம்

29 January 2021, 2:23 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கால்நடைத்துறை மருத்துவமனையில் பசு மாட்டிற்கு பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர் மற்றும் அரசு கால்நடைத்துறை மருத்துவமனையை கண்டித்து பசுமாட்டுடன் உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய பசு மாடு ஒன்று பிரசவமாக இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மாட்டை பிரசவம் பார்ப்பதற்காக மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத்துறை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் இங்கு மருத்துவர்கள் தற்போது மருத்துவம் பார்க்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கம் கிருஷ்ணன் உள்ளிட்டோர் புதுச்சேரி அரசு கால்நடைத்துறை மற்றும் மருத்துவமனை முன்பு பசு மாட்டுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாட்டின் உரிமையாளர் தனது பசு மாட்டை மேட்டுப்பாளையம் கால்நடத்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Views: - 0

0

0