மழையில் நனைந்து வீணாகும் நெல்: விவசாயிகள் வேதனை

7 July 2021, 6:45 pm
Quick Share

காஞ்சிபுரம்: அரசு கொள்முதல் செய்த நெல் அனைத்தும், மழையில் நனைந்து வீணாகும் அவலம் ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் நெல்வாய் பகுதியில் , சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து ஏறத்தாழ 8,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரிய பணமும் சென்றடைந்து விட்டது. தற்போது மாவட்ட நிர்வாகம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை உரிய முறையில் பாதுகாக்காமலும் அதை நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ள கிடங்குக்கு கொண்டு செல்லாமலும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்வாய் பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் பலமுறை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு எடுத்துக்கூறியும், செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருந்தால் இவ்வளவு மூட்டைகள் மழையில் நடந்து வீணானது என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

Views: - 45

0

0