மினி வேனில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்: கடத்தலில் ஈடுப்பட்ட 2 பேர் கைது

22 September 2020, 9:48 pm
Quick Share

வேலூர்: பள்ளிகொண்டா அருகே மினி வேனில் குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பள்ளிகொண்டா உதவி ஆய்வாளர் ரங்கநாதன் மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்ததில், அந்த வாகனத்தில் சுமார் 50 மூட்டைகளில் 1 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினி வேனை ஒட்டுநர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் குட்கா பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் மோகனவேல் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் குட்காவையும் மற்றும் 33 ஆயிரம் பணத்தையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து பள்ளிகொண்டா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.