கொரோனாவால் இறந்த நபரை மனிதாபி மானத்தோடு அடக்கம் செய்த ஊராட்சி மன்ற நிர்வாகிகள்…
7 August 2020, 11:23 pmதிருவள்ளூர்: சோழவரம் அருகே கொரோனாவால் இறந்த நபரின் உடலை பாடியநல்லூர் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மனிதாபி மானத்தோடு அடக்கம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொடிய நோயான கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை பாடியநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி நடராஜன்,
துணைத் தலைவர் சரண்யா ஆனந்த், வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், மோகன் பாதுகாப்பு உடை அணிந்து நல்லடக்கம் செய்தார்கள். துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் சானிட்டரி தெளிக்கப்பட்டது. இறந்தவரின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாடியநல்லூர் ஊராட்சியில் அனைத்து ஊராட்சி மன்ற நிர்வாகிகள் இரண்டாவது முறையாக கொரானா வைரஸ் காரணமாக உயிரிழந்த வரை நல்லடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.