பாலமுருகன் கோவில் நன்னீராட்டு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

Author: Udhayakumar Raman
31 March 2021, 4:27 pm
Quick Share

காஞ்சிபுரம்: தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள 35 அடி உயர முருகன் திருவுருவ சிலை கொண்ட பாலமுருகன் கோவில் நன்னீராட்டு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 35 அடி உயரம் கொண்ட திரு உருவச் சிலையுடன் கூடிய பாலமுருகன் கோவில் நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இங்கு அவருக்கு காவல்துறை அணிவகுப்புடன் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு 35 அடி உயரமுள்ள முருகன் திருவுருவச் சிலையின் நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், என்னை எத்தனையோ பேர் ஏன் இன்னும் நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது தான் எனக்கு கொரோனா ஊசி போட்டு கொள்கின்ற வேலை வந்துள்ளது. ஏனென்றால் நாளை முதல் 45 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அதனால் நாளை நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன். அதேபோல் நீங்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டும் போதாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறினார்.

Views: - 59

0

0