பட்டீஸ்வரர் கோவில் யானை உடல்நிலையில் முன்னேற்றம்: அறநிலையத் துறை ஆணையர் தகவல்..!!

18 May 2021, 11:35 am
Quick Share

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணியின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை, பல் வலியால் சரிவர உணவு உண்ணாமல் இருந்த நிலையில், தற்போது உடல் நலம் தேறி வருவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோவிலில், கல்யாணி, 29 என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது.

கடந்த ஐந்து நாட்களாக, கல்யாணி யானை சரிவர உணவு உண்ணாமல் இருந்தது.இதனையடுத்து, கோவில் நிர்வாகத்தினர், கால்நடை டாக்டரை வரவழைத்து, யானையை பரிசோதித்தனர். பரிசோதனையில், யானைக்கு பல்வலி இருப்பது தெரியவந்தது.தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்போது, கல்யாணி யானை உடல்நலம் தேறி வருவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில், ” கல்யாணி யானைக்கு, பல் வலியால், தாடை வீங்கி, சரிவர உணவு உண்ணாமல் இருந்தது. கால்நடை மருத்துவர் சுகுமார், யானையை பரிசோதித்து, மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. யானை உடல்நலம் தேறி வருகிறது. அத்திப்பழம் போன்ற சத்து நிறைந்த பழங்கள் வழங்கப்படுகின்றன.

Views: - 71

0

0