பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை: ரியல் எஸ்டேட் இடைத்தரகரை கடத்திய ரவுடிகள் கைது

13 July 2021, 5:56 pm
Quick Share

சென்னை: சென்னையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ரியல் எஸ்டேட் இடைத்தரகரை கடத்திய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெரவள்ளூர் ராம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வேதநாயகம். இவர் தற்போது தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றில் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது முதலாளி சுதாகருக்கும் தமீம் அன்சாரி என்பவருக்கும் ஊரப்பாக்கத்தில் இடம் வாங்கியது தொடர்பாக பணம் பிரச்சனை இருந்து வந்துள்ள தாகவும் , இதில் சுதாகர் சமீபத்தில் தமீம் அன்சாரியின் போனை எடுத்து பேசாததாலும். சுதாகர் தலைமறைவானதாலும் தமீம் அன்சாரி தொடர்ந்து வேத நாயகத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி தமீம் அன்சாரி இதயத்துல்லா. பாஷா கார்த்திக் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டோர் காரில் வந்து வேத நாயகத்தை கடத்திக் கொண்டு சென்று ஈ.சிஆரில் வைத்து அவரது ஏ.டி.எம் கார்டில் இருந்த 12,000 ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். மேலும் சுதாகர் தர வேண்டிய பணத்தை நீ தான் தரவேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளனர். பின்னர் வேத நாயகத்தை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். இதனால் பயந்து போன வேதநாயகம் இது குறித்து திரு.வி.க நகர் காவல் நிலைய த்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் திரு.வி.க நகர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகளின் செல் போன் சிக்னலை வைத்து ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஆன்சர் பாஷா, பெரும்பாக்கத்தை சேர்ந்த இதயதுல்லா, அழகானந்தன், பாண்டியராஜன், கண்டிகையை சேர்ந்த ரூபங்குமார், பெரும்பக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்கின்ற பாம் கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 96

0

0