பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன‌ முறையில் விவசாயிகள் போராட்டம்

Author: Udhayakumar Raman
21 October 2021, 2:26 pm
Quick Share

திருச்சி: மத்திய அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தி ஆதிவாசி போல இழை, தழைகளை ஆடையாக அணிந்து நூதன‌ முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த 12 -ம் தேதி முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 10-ம் நாளான இன்று விவசாயிகள் ஆதிவாசி போல இழை,தழைகளை ஆடையாக அணிந்து நூதன‌ முறையில் போராட்டம் நடத்தினர்.

Views: - 106

0

0