பேருந்துகளில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் : காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!
Author: kavin kumar17 January 2022, 6:26 pm
தருமபுரி: தருமபுரியில் காவல்துறையினர் பேருந்துகளை நிறுத்தி முக கவசம் அணியாமல் செல்பவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதித்தும், விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
கொரோனா மூன்றாவது அலை தொடங்கி உள்ள நிலையில் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணியாமல் செல்பவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் முக கவசம் இல்லாமல் வருபவர்களை காவல்துறையினர் கண்கணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதே போல் இன்று தருமபுரி அடுத்த சோளக்கொட்டாய் பகுதியில் மதிகோண்பாளையம் காவல் துறையினர் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம், கார் , பேருந்துகளை நிறுத்தி முக கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதித்தும் எச்சரித்து அனுப்புகின்றனர். மேலும் பேருந்துகளில் பயணம் செய்பவர்களிடம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கொரோனா வேகமாக பரவி வருகிறது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
0
0