பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

14 April 2021, 8:31 pm
Quick Share

தூத்துக்குடி: புதியம்புத்தூரில் பொதுஇடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், வருவாய் ஆய்வாளர் கற்பகவள்ளி ,காவல்துறை உதவி ஆய்வாளர் சுப்பாராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று புதியம்புத்தூரில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களுக்கு தலா 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவ்வழியாக வந்த பேருந்துகளில் ஏறி பயணிகளுக்கு முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று ஆலோசனையும் கூறினார்.

Views: - 8

0

0